ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்திக்க உள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்று மாலை 4 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று முற்பகல் 9 மணிமுதல் நடைபெற்று வருகிறது.
அதேவேளை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் கூடி ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்னர், பதவியிலிருந்து விலகுமாறு பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்க ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாட்டாளி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, ரவூப் ஹக்கீம், பழனி திகாம்பரம், மனோ கணேசன், பிரதி அமைச்சர் பரணவிதாரண, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது எடுக்கப்பட்ட தீர்த்தானத்தை இன்றைய தினம் பிரதமருக்கு தெரிவிக்கவுள்ளதாக மனோ கணேசன் சகோதரமொழி ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்

