மொஹமட் சுலைமான் கொலை – மரபணு பரிசோதனையை நடத்த கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவு

363 0

makkalviruppam920பம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து மாதிரிகளைப் பெற்று, மரபணு பரிசோதனையை நடத்த கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வாகனத்துக்குள் மனித இரத்தம் அல்லது மனித உடற்பாகங்கள் இருக்குமானால் அவற்றை இவ்வாறு மரபணு பரிசோதனைக்கு உள்ளாக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் கைப்பேசி உரையாடல்கள் தொடர்பில் ஐந்து தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து முழுமையான அறிக்கையை பெறுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.