சாதாரண தர மாணவர்களுக்கு 13வருடம் உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டம்

221 0

2017ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட 13வருடம் உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் முதலாவது கட்ட நடவடிக்கைகள் தற்போது பாடசாலையில் நடைபெற்றுவருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் 42 பாடசாலைகளை சேர்ந்த கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மற்றும் சித்தி பெற தவறிய மாணவர்கள் 2,400 மாணவர்கள் இந்த கற்கை நெறிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இந்த வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை இவ்வருடம் மே மாதம் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக மேலும் 150 பாடசாலைகளை சேர்ந்த 14,000 மாணவர்கள் தொழிற்கல்வியின் கீழ் கல்வி நடவடிக்கைகளுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் தொலைநோக்கிற்கு அமைவாக இந்த கல்வித்திட்டம் முன்னனெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்பொழுது இடம்பெறுகின்றன.

2018 ஆண்டு மேமாதம் அளவில் 2,100 ஆசிரியர்கள் இதன்கீழ் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். தெரிவுசெய்யப்பட்ட 150 பாடசாலைகளில் 417 ஸ்மாட் கிளாஸ்றூம்களை (Smart Class Rooms) அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

13 வருட உறுதிசெய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு நடைமுறைப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. உலகிற்கு பொருத்தமான 26 தொழிற்கற்கை நெறிகள் பாடசாலைக்கல்வியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர சித்திபெற்ற அல்லது சித்திபெற தவறிய மாணவர்களுக்கு இந்த தொழிற்கல்வி கற்கை நெறியின் கீழ் 13 ஆண்டு உறுதிசெய்யப்பட்ட பாடசாலைக்கல்வியை தொடர்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

இந்த வேலைத்திட்டத்திற்கு 2018ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் 3,500 மில்லியன் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. இந்த 13 வருட உறுதிசெய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கம் உலகிற்கு பொருத்தமான நடைமுறை செயல்முறை பயற்சியை கொண்ட தொழிற்கல்வியை தொடர்வதற்கு பாடசாலைக் கல்வி மட்டத்திலேயே மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதன் காரணமாக பிரஜை மற்றும் சமூக பொறுப்பை நிறைவேற்றக்கூடிய செயற்திறன் மிக்கதும் பயனுள்ளதுமான மனிதவளத்தை இந்த நாட்டில் உருவாக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a comment