இலங்கையுடனான உறவில் பாதிப்பில்லை – மலேசியா

300 0

707590d2008a8e80f15b39c1bedd85e7_xlஅரசியல் ரீதியான குழப்பத்தை தோற்றுவிக்கவே, மலேசியாவுக்கான உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, மலேசியாவின் பிரதி உள்துறை அமைச்சர் நூர் ஜஸ்லான் மொஹமட் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் வானூர்தி நிலையத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்குதலுக்கு உள்ளானார்.

இது தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதேநேரம், மேலும் நான்கு பேர் கைது செய்யப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மலேசியாவின் பிரதி உள்துறை அமைச்சர் ஜஸ்லான் மொஹமட், இந்த தாக்குதலுக்கும் தீவிரவாத செயற்பாடுகளுக்கும் இடையில் தொடர்புகள் இல்லை என்று அறிவித்துள்ளார்.

மேலும், இந்த தாக்குதல் காரணமாக இலங்கை – மலேசிய உறவிலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.