கண்டி திகன பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனக் கலவரம் போன்று எதிர்காலத்தில் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகளின் 44 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
இச்சம்பவத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் எனவும், குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கப்பட மாட்டாது எனவும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பில் கணனி தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். நாட்டிலுள்ள உயர் நீதிமன்றம் முதல் கீழ் மட்ட நீதிமன்றங்கள் வரையில் இந்த வசதிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

