பிரதமர் மீதான பிரேரணைக்கு கட்சியைப் பிளவுபடுத்தாத தீர்மானம் எடுப்போம்- UPFA

341 0

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது எப்படி வாக்களிப்பது என்பதை தீர்மானிக்காவிடினும், கட்சியைப் பிளவுபடுத்தாமல் இருக்கும் வகையில் தீர்மானம் ஒன்றை கட்சி எடுக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்டு உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவான 29 உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிழ்வு இன்று அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவுக்கு ஆதரவாகவும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவும் செயற்படும் சிலர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து ஸ்ரீ ல.சு.க. தீர்மானம் எடுக்கும் போது இவர்களை மறந்து தீர்மானம் எடுத்தால், இவர்கள் கட்சியிலிருந்து விலகிச் செல்லும் நிலைமை உருவாகும். கட்சி பிளவுபட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு காரணமாக அமையப் போகிறது என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

Leave a comment