சிங்களம் சுவிஸில் முன்னெடுக்கும் கலாச்சாரவிழா யாருக்கானது?

557 0

Letterhead TCC Germany

சிங்களம் சுவிஸில் முன்னெடுக்கும் கலாச்சாரவிழா யாருக்கானது?
உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் சாட்சியாய் புறக்கணிப்போம்.

அன்பான எம்தமிழ் உறவுகளே!

தமிழ்த்தேசிய மக்களாகிய எமது அடிப்படை வாழ்வுரிமைகளையே மறுத்தபடி,சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழும் தகைமைகளை குழிதோண்டிப் புதைத்தபடி,புலம்பெயர் தேசங்களில் எஞ்சியுள்ள எம் உரிமைசார் உணர்வலைகளை வேரறுத்து முழுமையாக எம்மை உலகப் பரப்பிலும் அடிமைகொள்ளும் கபடத் தனத்துடன் சிங்களதேசம் சுவிஸ் நாட்டில் முன்னெடுக்க விளைந்திருக்கும் “உணவும் களிப்பும்” எனும் கலாச்சார விழா யாருக்கானது? எனும் கேள்வி முழக்கத்தோடு,நாம் அள்ளிக்கொடுத்த அத்தனை உயிர் வலிகளின் சாட்சியாகவும் ,உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் சாட்சியாகவும் புறக்கணிப்போம்.நரித்தனம் கொண்டு செயலாற்றும் தீய சக்திகளை அணுகவிடாது அவற்றின் முகமூடிகளைக் கிழித்து,உண்மைகளை புரிந்து எமது மக்களையும்,எமது அரசியல் அபிலாசைகளையும் தக்க வைப்போம் தயாராகுங்கள்.

உலகநாடுகளின் உதவிகளை ஒருங்கிணைத்து எம் தாய்நிலத்தில் சிங்களப் படைகள் ஆடிய கோரத் தாண்டவத்தில் பலிகொண்ட  மக்களுக்கும்,இழந்து நிற்கும் பொருளாதார வாழ்வுரிமைக்குமாக ,சிந்தப்படும் கண்ணீரின் கனதியை கண்டுகொள்ளாது,நல்லாட்சி எனும் மாயை கொண்டு இன்னும் கொடும் சிறைகளில் வாழும் எம் உறவுகளின் இயல்பு வாழ்வுதனை செவ்வயாக்க முற்படாது ,எம்மினத்தை தாம் வெற்றி கொண்டுள்ளோம் எனும் மமதையில் எமது தாய்நில முற்றங்களிலேயே கட்டி வைத்திருக்கும் போர்வெறி வெற்றிச் சின்னங்களை அகற்ற முற்படாது,அவை அப்படியே இருக்கும்வரை யாரோடு யார் கலாச்சாரவிழா நடாத்துவது? யாருக்கு யார் விருந்தோம்புவது?யாரோடு யார் நல்லுறவு பேணுவது?

அன்பான மக்களே!
நாம் சலுகைகளுக்காக அடிமையாகும் இனத்தின் பிரதிநிதிகள் அல்ல.எம் வரலாற்று உரிமைக்காக களமாடி விதைந்த மானமற  வீரர்களின் கல்லறைகளில் சத்தியம் செய்து வாழும் வரலாற்றைக் கொண்டவர்கள்.விடுதலைக்கான காலம் காத்திருப்புக்குள் கடந்து சென்றாலும்,எங்கள் உணர்வுகளை அடிமைக்குள் சோரம் போகவிடாமல் பாதுகாப்போம்.எதிரியால் திட்டமிடப்படும் அனைத்து இராஜதந்திர,குள்ளநரிச் செயற்பாடுகளையும் இனம்கண்டு புறக்கணிப்போம்.மெல்லெனக் கொல்லும் பேராபத்துக்களில் இருந்து எம்மை நாமே காத்துக் கொள்வோம்.

“விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி”எனும் தலைவரின் தாரக மந்திரம் சமகால நடைமுறைக்கும் உயிரோட்டமாகவே துலங்கி நிற்கிறது.

அன்பான மக்களே!
சுவிஸ் நாட்டில் அடியெடுத்து வைக்கப்படும் கலாச்சார விழாவின் மூலம் எதிரியால் திட்டமிடப்படும் ஏமாற்று வித்தைக்கு எதிராக நிமிர்ந்தெழுவோம்.எம்மையும் உலகையும் ஆசைக்குள் அசைக்கும் செயலை முறியடிப்போம்.இதன் மூலம் ஏனைய நாடுகளுக்கும் இச்செயல் பரவ விடாது தடுப்போமென அன்புரிமையுடன் வேண்டுகின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

suwis-2