தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இலங்கை அரசுக்கு அமெரிக்கா எடுதியம்ப வேண்டும் -சி.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க தூதுவரிடம் தெரிவிப்பு- (முழுமையான வீடியோ)

524 0

DSC_0010தமிழ் மக்களின் சரித்திர பின்னணிகளையும், அவர்களுடைய மன வேதனைகளையும், அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் இலங்கை அரசாங்கத்திற்க அமெரிக்கா எடுத்தியம்ப வேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த அமெரிக்காவின் இலங்கைக்கான பதில் தூதுவர் றேபேட் கில்ரனிடம் வடமாகாண முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த அமெரிக்காவின் இலங்கைக்காக பதில் தூதுவர் றொபேட் கில்ரன் அடங்கிய குழுவினர் இன்று மதியம் கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு விஜயம் செய்தனர்.
அங்கு சென்ற அவர்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இக் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்:-

மத்திய அரசாங்கம் எதனையும் எங்களுடன் கலந்தாலேசித்து நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நிர்வாகம் நல்ல முறையில் நடாத்தலாம். ஆனால் மத்திய அரசாங்கம் அவ்வாறு செய்யாமல் மேலிருந்து கீழ் வரும் வகையில் கொழும்பில் தீர்மானங்கள் எடுத்துவிட்டு அந்த தீர்மானங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறது.
இதனால் எமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பான அவர்களுக்கு எடுத்துக் கூறியிருந்தேன்.
நுpர்வாகம் சம்மந்தமாக முக்கிய பிரச்சினைகள் உள்ளது. எங்களுக்கு நன்மைதரும் என்று கூறும் எந்த ஒரு விடயத்தையும் எங்களோடு கலந்தாலேசிக்காமல், அவ்விடயங்கள் தொடர்பாக எங்களுடைய கருத்துக்களை கேட்காமல், அவை தொடர்பான இறுதி முடிவுகளை கொழும்பில் இருந்து எழுத்துவிடுகின்றார்கள்.
இவ்வாறு எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் இந்த இந்த விடயங்களை நாங்கள் இங்கு செய்யப் போகின்றோம், இதனைச் செயற்படுத்துவதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு அவசியம் என்றும் இவ்வாறான செயற்பாடுகள் நல்லெண்ணத்திற்கு வழிவகுக்கும் என்றெல்லாம் கூறுவதில் பயனில்லை.
ஆகவே எந்த ஒரு செயற்றிட்டத்தை அமைக்கும் போதும், தமிழ் மக்களின் பிரநிதிதிகளாக உள்ளவர்களிடம், குறிப்பாக வடமாகாண சபையினருடன் கலந்தாலேசிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். அதனை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
காலகாலமாக தனித்துவமான மொழியோடு, கலாசார பிண்ணணியோடு வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்கள் இரந்து வருகின்றார்கள்.
சரித்திர ரீதியிக 1833 ஆம் ஆண்டில்தான் ஆங்கிலேயர்கள் இருந்து போது அவர்களுடைய நிர்வாக இலகுவிற்காக வேவ்வேறாக இருந்து மாகாணங்களை அல்லது மாவட்டங்களை ஒருங்கிணைத்தார்கள். இதனால்தான் இலங்கை ஒரு ஒருமித்த நாடாக வந்தது என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டியிருந்தேன்.
1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைத்த போது தமிழ் மக்களுக்கு தர வேண்டிய தனித்துவத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஒரு தனிநாடாக முழு நாட்டினையும் பிரகடணப்படுத்தி ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்றாலும், சட்டப்படி 25 ஆவது உறுபுரையில் பிரகாரம் எந்த ஒரு சட்டத்தையும் சிறுபான்மை இனத்தினருக்கு எதிராக கொண்டுவர முடியாது என்ற கருத்தை சட்ட ரீதியாக முன்வைத்துள்ளதையும் அவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தேன்.
இவ்வாறு இருந்தும் கூட 1972 ஆம் ஆண்டிலே கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் யாப்பில், இவ்விடயம் தவிர்க்கப்பட்டு, பெரும்பாண்மை மக்களுக்கு ஒரு முன்னுரிமை கொடுக்கும் வண்ணமாக அவ் யாப்பு அமைந்ததால்தான் போருக்கு இடம் கொடுத்தது. இதனையும் அவர்கள் விளங்கிக் கொண்டுதான் இருப்பார்கள்.
பொதுவாக நான் அவர்களிடம் தமிழ் மக்களுடைய மன வேதனைகளையும், எமது சரித்திர பிண்ணணிகளையும், எங்களுடைய எதிர்பார்ப்புக்களையும், அமெரிக்க இலங்கை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூற வேண்டும்.
இந்த அடிப்படையிலே அரசியல் யாப்பு மாற்றங்கள் நடைபெற வேண்டும் என்பதையும் அவர்களக்கு எடுத்துரைத்தேன் என்றார்.