பேஸ்புக்கில் இனவாத கருத்துக்களை பதிந்த முன்னாள் இராணுவ வீரர் விளக்கமறியலில்

824 11

பேஸ்புக் கணக்கின் ஊடாக இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமான கருத்துக்களை பதிவு செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்று குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிரான விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார், சந்தேநபரை எதிர்வரும் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a comment