ஒரு கோடிக்கும் அதிக பணத்தை கடத்த முற்பட்ட இந்தியர் கைது

33581 229

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து ஒரு தொகை வௌிநாட்டுப் பணத்தை கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் இன்று (20) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு கோடியே 03 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான 67,000 அமெரிக்க டொலர் பணம் கடத்த முயற்சிக்கப்பட்டதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று காலை இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல் 404 என்ற விமானம் மூலம் தாய்லாந்தின் பெங்கொக் நகருக்கு பயணிக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

சந்தேகநபர் கெசினோ விளையாட்டில் ஈடுபடக் கூடியவர் என்றும், அவர் கெசினோ விளையாட்டில் ஈடுபடுவதற்காகவே இலங்கை வந்திருந்ததாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த பணத் தொகை கைப்பற்றப்பட்டதாகவும், 50 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment