வன்முறையால் பாதிக்கப்பட்ட மதஸ்தலங்களை புனரமைக்க நடவடிக்கை – அகில விராஜ்

26112 0

அண்மையில் இடம்பெற்ற கண்டி வன்முறைகளின் போது பாதிக்கப்பட்ட மதஸ்தலங்களை புனரமைக்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மத்திய கலாச்சார நிதியத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி, குறித்த பகுதிகளில் பாதிப்புக்குள்ளான மதஸ்தலங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரித்து புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய கலாச்சார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரஷாந்த் குணவர்தன தலைமையிலான குழுவொன்று கண்டி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மதஸ்தலங்கள் தொடர்பில் அடிப்படை ஆய்வொன்றை மேற்கொண்டுள்ள அதேவேளை, புனரமைப்பு பணிகளுக்கு தேவையான நிதி மற்றும் தொழிநுட்ப தேவைகளையும் மத்திய கலாச்சார நிதியத்தின் ஊடாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment