விலாடிமிர் புட்டினுக்கு மைத்திரிபால சிறிசேன வாழ்த்து

15273 0

நடைபெற்று முடிந்த ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டினுக்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் முகமாக விசேட செய்தியொன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டினின் வெற்றியானது அவர் மீது அந்நாட்டு மக்கள் தொடர்ந்தும் வைத்துள்ள நன்மதிப்பை எடுத்துக் காட்டுவதாக ஜனாதிபதி மைத்திரிபால அவ்வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் இரு தரப்பு உறவைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment