தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக ஆரியதாஸ குரே கூறியுள்ளார்.
தான் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
தனது பதவி நீக்கத்திற்கு காரணம் தனது வயதெல்லையே என்று பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக ஆரியதாஸ குரே கூறியுள்ளார். இது தொடர்பான கடிதம் இன்று தனக்கு கிடைத்ததாக ஆரியதாஸ குரே அத தெரணவிடம் கூறினார்.

