ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக, இலங்கையின் உயர்மட்டக் குழு சுவிற்சர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவுக்கு இன்று பயணமாகவுள்ளது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குகின்றார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புக்கூறல் மூலம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புகள் குறித்தும் இதன் போது தெளிவுபடுத்தப்பட உள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகள், பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான சட்டத்திற்குப் பதிலாக மாற்று உத்தேச சட்டமூலம் குறித்து மாநாட்டில் இலங்கைத் தூதுக்குழுவினர் விடயங்களைத் தெளிவுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

