மின்சாரம் தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

210 0

வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தைச் சேர்ந்த 30 வயதுடைய எஸ்.சரவணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பித்துள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு வீதி மற்றும் ஆலயத்தின் அலங்கார வேலைப்பாட்டிற்காக அத்தோட்டத்தின் தொழிற்சாலையிலிருந்து வரும் பிரதான மின் இணைப்பிலிருந்து மின்சாரத்தை பெறும் முயற்சியில் ஈடுப்பட்ட பொழுது அதிகளவிலான மின்சார பாய்ச்சலுக்கு இலக்காகி இவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு மின்சாரத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின் சடலம் வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பான மரண விசாரணையை மேற்கொண்டதன் பின் சடலத்தை சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக வட்டவளை பிரதேச வைத்தியசாலை வைத்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதனால் டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் ஆலய திருவிழா தற்பொழுது ஸ்தம்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a comment