நான்கு நாட்களின் பின் கரையொதுங்கிய மீனவரின் சடலம்

1 0

வடமராட்சி கட்டைக்காட்டில் கடந்த 9 ஆம் திகதி காணாமல் போன மீனவர் இன்று சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.

வடமராட்சி கட்டடைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த மீனவரான தேவதாசன் யூட்அலக்சன் (வயது 38) கடந்த 09 ஆம் திகதி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயிருந்தார்.

மறுநாள் 10 ஆம் திகதி அவர் பயணித்த படகு முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் கரை ஒதுங்கியிருந்தது.

இந்நிலையில் அவரது சடலம் இன்று (13.03.2018) காலை வடமராட்சி கட்டடைக்காட்டு கடற்கரையில் கரைஒதுங்கியுள்ளது.

உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது உடல் கட்டைக்காடு பொது மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளைப் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Related Post

கருத்துச் சுதந்திரத்தைக் காவு வாங்கும் வவுனியா வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்!

Posted by - November 24, 2017 0
தற்போதைய சூழலில் சமூக ஊடகங்கள் என்பவை கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் புதியதொரு பரிமாணமாக பரந்துசெல்கின்றது. ஊடகவியலாளர்கள் மட்டுமே எழுதலாம்,பேசலாமென்ற எல்லையினை தாண்டி மக்கள் ஒவ்வொருவரும் தங்களது மனதில்…

யாழ்ப்பாணம் சவகச்சேரியில் பால் குளிரூட்டும் நிலையம்(காணொளி)

Posted by - April 3, 2017 0
யாழ்ப்பாணம் சவகச்சேரியில் பால் குளிரூட்டும் நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனால் குறித்த…

படையினர் வசமுள்ள காணிகளின் அளவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது: சத்தியலிங்கம்

Posted by - December 22, 2018 0
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வவுனியா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள காணிகளின் அளவு மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப…

இலங்கையின் ஐம்பது வருடகால வரலாற்றில் தமிழரை ஏமாற்றுவதே நடந்தது- சரவணபவன்

Posted by - July 29, 2018 0
இலங்கையின் கடந்த 50 வருடகால வரலாற்றை மீட்டிப்பார்த்தால் தமிழர்களை ஏமாற்றுவது தான் வழமையான விடயம்.இவ்வாறு வலி.தென்மேற்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.…

விநாயகர் ஆலயத்தில் ஆராதனையின் போது தோன்றிய பாம்பு.

Posted by - March 30, 2018 0
வவுனியா – செட்டிகுளம், முகத்தான் குளம் பகுதியில் உள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிஷேக நிகழ்வு இன்று இடம்பெற்று வருகின்ற நிலையில் ஆராதனையின் போது பாம்பு ஒன்று தோன்றியுள்ளது. குறித்த ஆலயத்தில் உள்ள…

Leave a comment

Your email address will not be published.