110 பேருடன் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட ரஷ்ய அதிபர் புதின்

222 0

2014-ம் ஆண்டு குளிர்க்கால ஒலிம்பிக் தொடரின் போது 110 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் அதிபராக இருக்கும் விளாடிமிர் புதினின் பதிவிக்காலம் நிறைவடைய இருக்கிறது. இதையடுத்து வருகிற 18-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பேசியுள்ளார். சுமார் இரண்டு மணிநேரம் கொண்ட அந்த 2014-ம் ஆண்டு குளிர்க்கால ஒலிம்பிக் தொடரின் போது 110 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த ஆவணப்படத்தில் புதின் கூறுகையில், கடந்த 2014-ம் ஆண்டு, பிப்ரவரி 7-ம் தேதி குளிர்க்கால ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நான் காத்திருந்தேன். அப்பொழுது பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து, உக்ரைனில் இருந்து துருக்கி சென்ற பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்டதாகவும், அதில் வெடிகுண்டுகள் இருந்ததாகவும், அதைக்கொண்டு ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெறும் குளிர்க்கால ஒலிம்பிக்கை சீர்குலைக்க மர்மநபர்கள் திட்டமிட்டுள்ளனர், என்றும் தெரிவித்தனர்.

அந்த விமானத்தில் 110 பயணிகள் பயணம் செய்தனர். ஆனால் குளிர்க்கால ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவில் சுமார் 40 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். இதையடுத்து அந்த விமானத்தை சுட்டு வீழ்த்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன். ஆனால் சில நிமிடங்கள் கழித்து, அந்த தகவல் பொய்யானது என்று எனக்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆபத்தின்றி அந்த விமானம் துருக்கிக்கு புறப்பட்டு சென்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a comment