கண்டி வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்!!

4 0

கண்டியில் இடம்பெற்ற வன்முறைக்கு கண்டம் தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பட்டில் நடத்தப்பட்டுள்ளது.கடந்த மாதம் 22ஆம் திகதி தெல்தெனிய பிரதேசத்தில் பாரவூர்தியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை, முச்சக்கரவண்டியில் வந்த சிலர் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

அதன்போது, தாக்குதலுக்கு உள்ளானவர் பலியானார். தாக்குதல் சம்பவத்தில் பலியானவரின் ஆதரவாளர்கள், தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீ மூட்டியுள்ளனர்.இதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை தொடர்ந்த நிலையில், இதில் மற்றுமொரு வர்த்தக நிறுவனத்திற்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 24 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை விடுவிக்கக்கோரி மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்ன தேரர் தலைமையில் தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.எனினும், நிலைமை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் மக்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உடன் அமுலாகும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

Related Post

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான கொழும்பை நோக்கிய வாகனப் பேரணி வவுனியா புதிய பேரூந்து தரிப்பிடத்திலிருந்து………….(காணொளி)

Posted by - September 13, 2017 0
சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான வாகனப் பேரணி இன்று காலை வவுனியா புதிய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்னிருந்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர்…

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் யாழில் ஸதம்பிதம்(படங்கள்)

Posted by - April 27, 2017 0
காணாமல் ஆக்கப்போரினால் இன்றைய தினம்  வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய சேவைகளான உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் சேவை தவிர்ந்த…

மன்னாரில் உலக சுற்றாடல் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு!

Posted by - June 5, 2018 0
மன்னார் சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(5) காலை 10 மணியளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றது.…

இலங்கை தேசியக்கொடியுடன் முச்சக்கரவண்டியில் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

Posted by - December 20, 2018 0
வவுனியா நகரசபை பூங்கா வீதியில் இன்று மாலை இலங்கையின் தேசியக்கொடியுடன் முச்சக்கரவண்டியில் அதிவேகமாக சென்ற இளைஞர்களை பொலிஸார் திரத்திப்பிடித்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர். வவுனியா நகரசபைக்கு அருகே…

செம்­மணி எலும்­பின் ஆய்­வுக்கு பன்­னாட்டு நிபு­ணர்­கள் வேண்­டும்! – மாவை

Posted by - July 24, 2018 0
செம்­ம­ணி­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள மனித எலும்­புக்­கூட்டை அகழ்ந்­தெ­டுக்­கும் பணி­க­ளி­லும் எலும்­பு­க­ளைப் பகுப்­பாய்வு செய்­யும் பணி­க­ளி­லும் பன்­னாட்டு நிபு­ணர்­கள் குழுவை அனு­ம­திக்­க­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை. சோ.சேனா­தி­ராசா.

Leave a comment

Your email address will not be published.