சீனாவில் முதியவர் வயிற்றில் இருந்து 100 மீன் எலும்புகள் அகற்றம்

220 0

சீனாவில் 69 வயதான முதியவர் வயிற்றில் படிந்திருந்த 100-க்கும் மேற்பட்ட மீன் எலும்புகளை டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவருக்கு அடி வயிற்றில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.

உடனே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் பார்க்கப்பட்டது. அவரது அடி வயிற்றில் குடல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மீன் எலும்புகள் (மீன் முற்கள்) படிந்து இருப்பது தெரிய வந்தது.

எனவே ஊசி போன்று இருந்த 100-க்கும் மேற்பட்ட மீன் எலும்புகளை ஆசன வாய் வழியாக டாக்டர்கள் அகற்றினர்.

சில நாட்களுக்கு முன்பு இந்த முதியவர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் கெண்டை மீன் உணவு பரிமாறப்பட்டது. அதை விரும்பி சாப்பிடும் அவர் மீனின் சதைப்பகுதி மற்றும் எலும்புகள் அனைத்தையும் அப்படியே விழுங்கி விட்டார்.

அதில் எலும்புகள் (முற்கள்) ஜீரணம் ஆகாமல் அப்படியே வயிற்றின் அடிவயிறு குடல் பகுதியில் தங்கி விட்டது. தற்போது அகற்றிய எலும்புகள் தவிர மேலும் சில எலும்புகள் அகற்றப்படாமல் உள்ளன. குடல் பகுதியில் வீக்கம் இருப்பதால் சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீதமுள்ள எலும்புகளை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

Leave a comment