ஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக மற்றொரு வழக்கில் கைது வாரண்ட்

6 0

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு மோசடி வழக்கில் ஜாமின் வழங்கப்பட்ட சில மணி நேரத்தில், மற்றொரு வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் அவர் வெளியே வர முடியாத சூழ்நிலை உள்ளது.

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, தனது கணவர் பெயரில் நடத்தி வந்த அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த டாக்கா சிறப்பு நீதிமன்றம் கலிதா ஜியாவுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. அவரது மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கலிதா ஜியா உள்ளிட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, கலிதா ஜியா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இவ்வழக்கில் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை எனவும், ஐகோர்ட் நீதிபதி தலைமையில் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார். மேலும், தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கலிதா ஜியாவை 4 மாத இடைக்கால ஜாமினில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்தனர். இதனையடுத்து சிறை நடைமுறைகள் முடிந்து ஜாமினில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கலிதா ஜியா மீது 2015-ம் ஆண்டில் தொடரப்பட்ட கிரிமினல் வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை நடைமுறைப்படுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு கோமில்லா மாவட்டம் சவுத்தகிராம் பகுதியில் நடந்த தீ வைப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட கலிதா ஜியாவை கைது செய்ததற்கான ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும், 28-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கோமில்லா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டதால், கலிதா ஜியா ஜாமினில் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் மற்றொரு வழக்கில் கலிதா ஜியா மற்றும் அவரது பிஎன்பி கட்சியைச் சேர்ந்த 48 நபர்களை கைது செய்து ஏப்ரல் 24-ம் தேதி ஆஜர்படுத்தும்படி கோமில்லாவில் உள்ள மற்றொரு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Post

சிரியா மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை

Posted by - October 2, 2016 0
சிரியாவில் உள்ள அலெப்போ நகரின்மீது நடத்தப்படும் விமான தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆறு நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா…

எங்களை தாக்கினால் சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகளை தாக்குவோம் – ஏமன் தலைவர் எச்சரிக்கை

Posted by - September 15, 2017 0
ஏமன் நாட்டின் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தினால் அந்நாட்டில் உள்ள எண்ணெய் கிணறுகளை தாக்குவோம் என ஹவுத்தி அமைப்பு தலைவர் அப்தல் மாலிக் அல் ஹவுத்தி…

பத்திரிகையாளர் கொலையில், சவுதி இளவரசருக்கு பங்கு உண்டா, இல்லையா?

Posted by - November 22, 2018 0
அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வெளியுறவுத்துறை கமிட்டி, டிரம்புக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.

ஜப்பானில் முதன் முறையாக டோக்கியோ கவர்னராக பெண் தேர்வு

Posted by - August 1, 2016 0
ஜப்பானில் டோக்கியோ கவர்னராக முதன் முறையாக பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் கவர்னராக இருந்த யோய்சி மசூசோ ஊழல் புகார் காரணமாக தனது பதவியை ராஜினாமா…

மாலை சூட்டி, திலகமிட்டு நாய்களுக்கு நன்றி – நேபாள மக்களின் நெகிழ்ச்சி தீபாவளி

Posted by - November 7, 2018 0
நேபாள நாட்டு மக்கள் இன்று தங்களது வளர்ப்பு நாய்களுக்கு மாலை சூட்டி, திலகமிட்டு நன்றி பாராட்டி தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 

Leave a comment

Your email address will not be published.