கார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனு விசாரணையில் இருந்து நீதிபதி திடீர் விலகல்

242 0

கார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனு விசாரணையில் இருந்து நீதிபதி திடீர் விலகிக் கொண்டார். இதையடுத்து ஜாமீன் விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.

அதன்பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தியதில் நீதிபதி அவரை 24-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து டெல்லி திகார் ஜெயிலில் கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே கார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி இந்தர் மீத் கவுர் விசாரணை நடத்தி வந்தார். அவர் திடீர் என்று இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகிக் கொண்டார்.

இதையடுத்து ஜாமீன் விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது. நீதிபதி இந்தர்மீத் கவுர் மீது விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அவர் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்த டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்து இருந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கப்பிரிவு மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை 15ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.

Leave a comment