வீட்டிலிருந்து விமானப் பாகங்கள் மீட்பு

204 0

வீடொன்றில் இருந்து விமானப் பாகங்கள் சிலவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்தே குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொண்ட திடீர்சோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறு விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.

முன்னாள் விமானப்படை வீரரொருவரின் வீட்டில் இருந்து குறித்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment