இந்நாள், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இடையில் தொலைபேசி கலந்துரையாடல்

676 0

இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் இரண்டு இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இருவரும் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்த அமைச்சர்கள் பாரிய முயற்சி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரவை மாற்றமும் இதுவரை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment