இன வன்முறையால் அர்ஜுன் மஹேந்திரனை அரசாங்கம் மறந்துள்ளது- மஹிந்த

345 0

மத்திய வங்கி பிணை முறி மோசடியில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான அர்ஜுன் மஹேந்திரனை தற்பொழுது அனைவரும் மறந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜுன் மஹேந்திரன் குறித்து பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் தற்பொழுது அமைதியாக இருப்பதாகவும் மஹேந்திரனைக் கைது செய்ய தற்பொழுது எந்தவித அவசரமும் இல்லாதுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி சம்பவம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பதற்றமான நிலவரம் என்பவற்றால், அர்ஜுன் மஹேந்திரனை பொறுப்பிலுள்ளவர்கள் மறந்துள்ளனர். இருப்பினும், மஹேந்திரனின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment