களனிய பிரதேசத்தில் நாளை நீர் வெட்டு

374 0

நாளை (13) காலை 9 மணி முதல் மாலை 6 வரையில் களனிய பிரதேசத்தின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி களனிய பிரதேச சபை, பேலியகொட நகர சபை, வத்தளை நகர சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பியகம பிரதேச சபையின் கோனவெல வீதி, மகுருவில வீதி, விஜயராம வீதி மற்றும் பெரலேகல பகுதிகளுக்கும் இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகளுக்காகவே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment