கண்டி வன்முறையில் 161 பேர், ஏனைய பகுதியில் 69 பேர் கைது- பொலிஸ்

336 0

கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இதுவரையில் 161 பேரும், நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆங்காங்கே இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் அடிப்படையில் 69 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கண்டியில் தற்பொழுது அமைதியான நிலைமை காணப்படுகின்றது. பொது மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை சுமுகமாக முன்னெடுத்து வருகின்றனர். கடந்த 10 ஆம் 11 ஆம் திகதிகளில் கண்டி மாவட்டத்தில் எந்தவொரு வன்முறைச் சம்பவமும் இடம்பெறவில்லை.

பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவினரும் இராணுவமும் தொடர்ந்தும் அப்பிரதேசத்தில் இருத்தப்பட்டுள்ளனர். பிரதேசத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்கள் அகற்றப்படாமல் இருக்கின்றனர். இன்றைய தினம் கண்டி நிருவாக மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த சகல பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன. பொலிஸார் மிகவும் அவதானத்துடன் அப்பிரதேச பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a comment