துப்பாக்கி, ஆயுதங்களுடன் இருவர் கைது

398 0

சட்டவிரோத துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த இருவர் வெலிகம மிதிகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றங்கள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் அவர்களிடமிருந்து டீ 56 ரக துப்பாக்கி, கைக்குண்டு ஒன்று, மூன்று போலி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் 14கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் 28 மற்றும் 31 வயதுகளையுடைய மிதிகம பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து தடுப்பு காவல் உத்தரவின் படி ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றங்கள் ஒழிப்பு பிரிவினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

Leave a comment