இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இணையத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9, 10 ஆகிய இரு தினங்களில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இணையத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் மினுவங்கொடை மற்றும் ஹோமாகம பிரதேசங்களை சேர்ந்தவா்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களை இன்று (11) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

