காணாமல் போனோர் அலுவலம் தங்களுடைய செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டும்- கி.துரைராஜசிங்கம் (காணொளி)

17 0

காணாமல் போனோர் அலுவலம் தங்களுடைய செயற்பாடுகளை விரைவாக ஆரம்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நியமங்களுக்கு அமைவான சிறந்த ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என, தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் வாக்கு வங்கியின் சரிவு தொடர்பில் ஆராயும் குழுக்கூட்டம் நடைபெற்றபோது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் தமிழரசு கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில், தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி அங்கத்தவர்கள் உள்ளிட்டோர் வாக்கு வங்கியின் சரிவு தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஆ.புவனேஸ்வரன், து.ரவிகரன்,உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையேயான கருத்துக்களை கேட்டறிந்தனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழரசு கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம், கால ஒட்டத்திற்கு ஏற்ப கட்சியினை வடிவமைத்துக்கொண்டு செல்லவேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் மத்தியகுழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Related Post

இலங்கை பெண் சவூதி அரேபியாவில் உயிரிழப்பு (காணொளி)

Posted by - November 8, 2016 0
ஹட்டன் – மஸ்கெலியா – சூரியகந்த பகுதியைச் சேர்ந்த பெண் சவூதி அரேபியாவில் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹட்டன் – மஸ்கெலியா – சூரியகந்த பகுதியைச் சேர்ந்த பழனியாண்டி…

யுத்தத்திற்குப் பின்னர் தடுமாறும் இலங்கை.!

Posted by - March 20, 2018 0
யுத்தத்திற்குப் பின்னரான நிலைமாறுகால சூழலில் நாடு தடுமாறி திணறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். ட்டக்களப்பு கல்வி…

மன்னாரிலும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - October 13, 2017 0
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து வடக்கில் ஏற்பாடு செய்துள்ள பூரண ஹர்த்தால் இன்று மன்னாரிலும் அனுஸ்டிக்கப்பட்டது.…

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள்!

Posted by - August 9, 2018 0
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்பட்டு உள்ளது. நல்லூர்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு(காணொளி)

Posted by - March 27, 2017 0
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு…

Leave a comment

Your email address will not be published.