மகளிர் தினத்தை ஒட்டி பெண்களுக்கு இலவச பயணம்!

246 0

தனியார் பேருந்து சேவை நிறுவனமான பர்வீன் டிராவல்ஸ் மகளிர் தினத்தை முன்னிட்டு ஐந்து நாட்களுக்கு பெண்களுக்கு இலவச சேவை அளிக்க முன்வந்துள்ளது.

தனியார் பேருந்து சேவை நிறுவனமான பர்வீன் தமிழகம் முழுவதும் போக்குவரத்து சேவையளித்து வருகின்றது. தமிழகம் தவிர தென்மாநிலங்களிலும் அந்நிறுவனம் தனது பணியை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வழிமுறைகளை மேம்படுத்தும் விதமாக ‘உமன்ஸ் ஃபார் லைஃப்’ என்ற விழிப்புனர்வு இயக்கத்தை தொடங்கியுள்ளது.
வரும் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மார்ச் 8 முதல் 11-ம் தேதி வரை பெண்களுக்கு இலவச பயண சேவையை பர்வீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a comment