எச்.ராஜாவின் பெரியார் சிலை விமர்சனத்திற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஸ்டாலின், வைகோ, திருமா, சீமான் ஆகியோர் தங்களது பேச்சாற்றலை வீணாக்க வேண்டாம் என கமல் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தேசிய தலைவர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில், திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டது போல தமிழகத்தில் பெரியார் சிலை இடிக்கப்படும் என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மு.க ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான் என பல்வேறு கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு
என கமல்ஹாசன் கூறியுள்ளார். #KamalHaasan #Periyar


