திகன சம்பவம் – தீயில் கருகி முஸ்லிம் இளைஞர் பலி

262 0

கண்டி திகன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட வேளையில் தாய் தந்தை மற்றும் சகோதரனை காப்பாற்றி விட்டு தப்பிக்க முடியாமல் வீட்டினுள் சிக்குண்ட நிலையில் குறித்த இளைஞன் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி திகன பல்லேகல பகுதியை சேர்ந்த 22 வயதுடைய அப்துல் பாசித் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a comment