வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயச் சட்டமூலம், நாளை செவ்வாய்க்கிழமை (06) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க அலுவல்களாகவே, இந்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாக அறியமுடிகின்றது. எனினும், இன்று (05) நடைபெறுகின்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே, இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எட்டப்படுமென, அறிவிக்கப்பட்டுள்ளது.
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கு, ஏழு பேர் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஆணையாளர்களின் பதவிக் காலம் மூன்று வருடகாலப் பகுதிக்கு உரியதாகும். அவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த முதலாம் திகதியன்று வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

