வீசா இன்றி தங்கியிருந்த இந்திய பிரஜை கைது

455 0

வீசா இன்றி நாட்டில் இருந்த இந்திய பிரஜை ஒருவர் புஸ்ஸல்லாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான 35 வயதுடைய இந்திய நபரை இன்று கம்பளை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment