மானிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

417 0

பொகவந்தலாவ தெரேசியா தோட்டபகுதியில் விவசாய பயிர்செய்கை மேற்கொள்ளபடும் தோட்டமொன்றில் சட்டவிரோத மானிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இன்று (04) அதிகாலை 2 மணியளவில் இவர்கள் கைது செய்யபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே இவர்கள் கைது செய்யபட்டதாகவும் இவர்கள் பலாங்கொடை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேலை மானிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட ஒரு சில உபகரனங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட மூவரையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a comment