10 வயதான சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சிலாபம் – இரணவில, சமிதுகமயை சேர்ந்த ருசித் நிர்மல் என்ற 10 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜூட் பொன்சேகா எனும் சந்தேக நபர் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நயாரூ மீன்பிடி கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி காணாமல் போன இந்த சிறுவனின் சடலம் நிர்வாணமாக இரணவில காட்டுப் பகுதியில் 27 ஆம் திகதி மீட்கப்பட்டது.

