ஐ. நா வே! முள்ளிவாய்காலின் இரண்டாம் கட்டமா சிரியா?

1093 0

ஒன்பது வருடங்களுக்கு முன் அதாவது 2009 இல் ஈழத்தின் இறுதி யுத்தம் என கூறப்படும் “முள்ளிவாய்கால் மனித பேர் அவலம்” மீண்டும்  2018 இல் பூமி பந்தில் தலைவிரித்தாடுகின்றது.

இனப்படுகொலை ஏதோ ஒரு வடிவத்தில் எங்கோ ஒரு மூலையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 2009 இல் வன்னிமண்ணில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், கர்பிணித்தாய்மார்கள் , இளைஞர்கள் , முதியவர்கள் என வகை தொகையின்றி   கொல்லப்பட்டனர்.

உணவின்றி , நீர்இன்றி, மருத்து வசதிகள் இன்றி பல மாதங்கள் இருப்பிடம் இன்றி , கழிப்பிடம் இன்றி தெருத்தெருவாய் இறந்த உறவுகளின் உடல்களை கடந்து கண்ணீரும் செந்நீரும் சிந்தி குண்டு மழைக்குள் குளித்து கரை ஒதுங்கிய போது பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்ட நெடும் துயரம் தொடர்கதையா?

இன்று சிரியாவில் நாளுக்கு நாள் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்படும் துயரம் தமிழ் மக்களை குறிப்பாக ஈழ தமிழர்களை பெரும் மன ரீதியாக பாதித்துள்ளது. சிரியாவில் நடக்கும் போர் பற்றி உலகிலேயே தமிழர்கள்தான் கூகுளில் அதிகம் தேடி இருக்கிறார்கள்.

இதுகுறித்து கடந்த 7 நாட்களில்தான் கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. முக்கியமாக சிரியா (syria) என்று ஆங்கிலத்திலும், சிரியா தமிழ் (syria tamil) என்றும் அதிகமாக தேடப்பட்டு இருக்கிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதன்பின் சிரியா புகைப்படங்கள், காணொளிகள், இறந்தவர்கள் எண்ணிக்கை, போர் காரணம், சேவ் சிரியா (Save Syria) என்ற வார்த்தைகளும் அதிகமாக தேடப்பட்டு இருக்கிறது.

ஈழத்தமிழர்கள் வன்னியில் கொத்துக்கொத்தாய் கொல்லப்படும் போது புலம்பெயர் தமிழரும் தமிழக தமிழரும் ஆர்பாட்டங்களிலும் கவனயீர்பு போட்டங்களிலும் உயிர் தியாகங்கள் செய்த போதும் ஐ. நா மௌன காத்தது.

இன்றும் சிரிய மக்களின் துயரத்தை தன்துயராக கொண்டு ஈழத்தமிழர் ஆர்பாட்டங்களை மாவட்டம் தோறும் செய்து ஐ. நாவை நோக்கி மண்டாடுகின்றார்கள் . இப்போதும் ஐ. நா மௌனமா?

சிரியாவிற்கு ஐ.நா.வால் அனுப்பி வைக்கப்பட்ட உதவி குழு அங்கு இருக்கும் மக்களுக்கு உதவி செய்து வருகிறது. இதில் ஐ. நா உதவி குழுவை சேர்ந்த ஆண்கள், போரினால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் உடலுறவு வைத்து கொண்டால் மட்டுமே மருத்துவம், சாப்பாடு உள்ளிட்ட உதவி பொருட்களை தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா வன்முறை என்றால் அந்த மக்களை யார்தான் காப்பாற்றுவார்கள்.?

Leave a comment