வானுயுரப் பறக்கும் தேசியக்கொடியுடன் ஐநா வை நோக்கி இரண்டாவது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்

446 0

தமிழின அழிப்புக்கு நீதி கோரி கடந்த 2 நாட்களாக நடைபெறும் ஐநா நோக்கிய நீதிக்கான ஈருருளிப்பயணம் நேற்றைய தினம்  Namur  எனும் நகரத்தை ஊடறுத்து 100 Km  தூரத்தை தாண்டியுள்ளது.நேற்றைய தினம் Namur மாநில முதல்வருக்கு மனிதநேய பணியாளர்களால் மனுவும் கையளிக்கப்பட்டது. நேற்றைய பயணத்தில் காலநிலை கடும்குளிராக இருந்தாலும் தளராத உறுதியோடும் தமிழீழ கனவுடனும் பயணித்தார்கள்.

எதிர்வரும் 12.03.2018 திங்கள் கிழமை அன்று ஐநா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்  நடைபெற இருக்கும் மாபெரும் பேரணியில் ஈருருளிப்பயணம் நிறைவடைய இருக்கின்றது .

தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழீழமே எனும் உறுதியோடு ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேயசெயற்பாட்டாளர்கள் மிகுந்த வலிமையோடு சர்வதேச அரசியல் முற்சந்தி நோக்கி பயணிக்கின்றனர். அத்தோடு இப் பேரணியில் அனைத்து ஐரோப்பிய தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி உரிமையோடு வேண்டி நிற்கின்றனர் .

Leave a comment