வித்தியா கொலை வழக்கின் மேலதிக விசாரணை அறிக்கை திகைப்பில் சந்தேக நபர்கள் (முழுமையான வீடியோ)

400 0

M

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரைக்கம் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று செவ்வாக்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் மேற்படி உத்தரவினை பிறப்பதித்துள்ளார்.
இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது 12 சந்தேக நபர்களும் மன்றில் ஆஜயர் செய்யப்பட்டனர்.
இருப்பினும் சந்தேக நபர்கள் சார்பிலும், கொலை செய்யப்பட்ட வித்தியா சார்பிலும் சட்டத்தரணிகள் எவரும் மன்றில் ஆஜராகவில்லை.
இந்நிலையல் மன்றில் தோன்றிய குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரி சந்தேக நபர்களிடம் நடைபெற்றுவரும் மேலதிக விசாரணை அறிக்கையினை மன்றில் மர்ப்பித்திருந்தார்.
அத்துடன் வழக்கினை சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்வதற்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.