சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு விழாவிற்கு 5 இலட்சம் பேர் – அமைச்சர் எஸ்.பி

470 0

14195283_10154340130706327_5816915625625345417_oகுருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 65வது ஆண்டு நிறைவு விழாவிற்கு 5 இலட்சம் பேர் வருகைத் தந்ததாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆண்டு நிறைவு விழா நிறைவடைந்தவுடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுவரை  எந்தவொரு கட்சியின் மாநாட்டிற்கும் இது போன்றதொரு மக்கள் கூட்டம் வந்ததில்லை  என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் பதவி விலக்கப்பட்டும், பலர் தாமாகவே பதவி விலகியிருந்த போதிலும் அனைத்து தொகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் வருகைத் தந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த நிகழ்விற்கு வருகைத்தராதவர்கள் தொடர்பில் கவனத்தில் எடுக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.