ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக் குழு கூட்டம் வெகுவிரைவில் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று நிறைவடைந்த கட்சியின் 65வது ஆண்டு நிறைவு விழா தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்தக் கூட்டம் இடம்பெறும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கட்சியின் ஆண்டுநிறைவு விழாவில் கலந்துக்கொள்ளாத கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் மத்திய குழு கூடவுள்ள தினம் தொடர்பில் கட்சியின் உயர்மட்டம் தகவல்களை வெளிப்படுத்தப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

