யாழ்ப்பாணத்திற்கு நீண்டகாலத்தின் பின்னர் கரிகோச்சி புகையிரதம் வருகை(காணொளி)

404 0

மிக நீண்டகால இடைவெளியின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கல்கிசையிலிருந்து புறப்பட்ட கரிக்கோச்சி புகையிரதம் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.

ஜேர்மன், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுடன் கரிக்கோச்சி புகையிரதம் பயணிக்கின்றது.

கல்கிசையிலிருந்து திருகோணமலைக்கு சென்ற புகையிரதம், அங்கிருந்து கல்லோயா, மாகோ, அநுராதபுரம் சென்றதுடன், அங்கிருந்து இன்று காலை 8 மணிக்கு  பயணத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்து அங்கிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையத்தைச் சென்றடைந்தது.

இன்று காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இருந்து கல்கிசை நோக்கி கரிக்கோச்சி புகையிரதம் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

Leave a comment