முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி)

413 0

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக, நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காணி விடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள், கிளிநொச்சி இரணைதீவு மக்கள் மற்றும் மன்னார் முள்ளிக்குளம் மக்கள், கிழக்கு மாகாண மக்கள் மற்றும் தென்பகுதி மக்கள் என அனைவரும் ஒன்றுகூடி இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு நகர்ப் பகுதி பொதுச் சந்தைக்கு முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிறைவு பெற்றது.

வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்படுள்ள காணிகளை மக்களிடம் வழங்க வேண்டுமெனவும், மக்களிடம் வழங்கப்பட்ட காணிகளில், மக்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment