இலங்கை துறைமுக அதிகாரசபையின் சகல ஊழியர்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பள அதிகரிப்பு 2018 ஜனவரி மாதம் முதல் சம்பளத்துடன் சேர்த்துக்கொள்ளப்படும் என இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை துறைமுக அதிகாரசபை கடந்த ஆண்டில் ஆயிரத்து 330 கோடி ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளது. துறைமுகங்களின் செலவினம் குறைக்கப்பட்டு வருமானம் அதிகரித்தமை இதற்கான காரணமாகும் எனவும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியதுடன் செலுத்தப்படவிருந்த கடன் சுமையில் இருந்து விடுபட முடிந்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏழு துறைமுகங்களிலும் கடந்த ஆண்டு எட்டு தசம் ஐந்து வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

