ஜி-24 குழுவின் தொழில்நுட்பக் குழுக் கூட்டம் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் காலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த கூட்டம் நாளை மற்றும் நாளை மறுதினமும் ஆகிய இரு தினங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குழுமத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்த நிதியமைச்சின் செயலாளர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள், சிரேஷ்ட பிரதிநிதிகள் உட்பட 45ற்கும் மேற்பட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஜி-77 நாடுகள் குழுமத்தின் மற்றுமொரு கட்டணமான ஜி-24 குழுமம் 1971ம் ஆண்டு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

