சிலாபம் விபத்தில் 12 பேர் காயம்; 7 வாகனங்கள் சேதம்

212 0

சிலாபம், ஆணமடுவ பிரதான வீதியில் குமாரகட்டுவ பிரதேசத்தில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற மூன்று விபத்துக்களில் 12 பேர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவ்விபத்தில் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

நேற்று (24) இரவு குமாரகட்டுவ பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு மோட்டர் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதுடன் அதில் காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது அவர்களை மோட்டர் வாகனம் ஒன்று மோதியுள்ளது.

இவ்விரண்டு விபத்துக்களும் ஏற்பட்டு சிறிது நேரத்தில் சிலாபம் பொலிஸார் அவ்விடத்திற்கு வந்த போது மேலும் இரு மோட்டர் வாகனங்கள் அதே இடத்தில் விபத்துக்குள்ளாகி உள்ளது.

காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அதில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனிடைய விபத்தில் சம்பந்தப்பட்ட ஒரு மோட்டர் வாகனத்தையும் அதன் சாரதியையும் அவ்விடத்தில் இருந்தவர்கள் தாக்கியுள்ளனர்.

விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment