அமைச்சரவை திருத்தம் அவசியம் – லக்ஷ்மன் யாபா

302 0

தற்போதைய நிலைமையில் அமைச்சரவை திருத்தம் அவசியம் என அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான தீர்மானம் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாத்தறை ,கும்புறுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கம் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதை விடுத்து பொதுத்தேர்தலை நடாத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a comment