உதயங்கவுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு

306 0

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சர்வதேச பொலிஸாரினால் (இன்டர்போல்) சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை விமானப்படைக்கு மிக் விமானம் கொள்வனவு செய்தபோது இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலமொன்றை பெற அவர் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் சமூகமளிக்காததன் காரணமாக அவருக்கெதிராக நீதிமன்றத்தின் ஊடகங் திறந்த பிடியாணை விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய சர்வதேச பொலிஸார் ஆரம்பத்தில் நீல அறிவிப்பொன்றை மேற்கொண்டு பின்னர் சிவப்பு அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் உதயங்க வீரதுங்கவின் 16 வாங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதுடன், அதன்போது அவரது கணக்குகளில் 17 மில்லியன் அமெரிக்க டொலர் இருப்பு இருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பிரஜையான அவர், இலங்கையின் சட்டப்பிரகாரம் செயற்பட வேண்டுமெனவும், அவரது குற்றமற்ற தன்மையை சமூக ஊடகங்களின் ஊடக தெரிவிக்காமல், நீதிமன்றத்தின் முன்னிலையில் நிரூபிக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்வது தொடர்பில் இலங்கை பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்கள் ஊடக அவர் பதிலளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment