4000 பாலங்களை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை

398 0

மக்களின் அடிப்படை வசதிகளுக்கு பிரவேசிக்கும் வழிகளை மேம்படுத்தும் நோக்கில் 4,000 பாலங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் நேரடி கடன் வழங்கும் வசதிகள் இவ்வேலைத்திட்டத்துக்காக நிதியினை பெற்றுக் கொள்வதற்கு உகந்த கடன் மூலாதாரம் என இனங்காணப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 50 மில்லியன் பிரித்தானிய பவுன் மதிப்பீட்டு செலவில் கிராமிய பாலம் அமைக்கும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக ஐக்கிய இராச்சியத்தின் நிர்மாணிப்பு நிறுவனங்களிடத்தில் இருந்து கேள்வி மனுக்களை கோருவதற்கான அதிகாரத்தினை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கு வழங்கப்படவுள்ளது.

இதன் போது முன்வைக்கப்படுகின்ற யோசனைகள் மற்றும் விலை மனுக்களை மதிப்பீடு செய்து சிபார்சுகளை முன்வைப்பதற்காக உரிய தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு மற்றும் கொள்முதல் குழுவுக்கு அதிகாரத்தினை வழங்குவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment