முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பஸ் உதுரிப்பாகங்களை கொள்வனவு செய்யும் போது நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவால் தன்னை கைது செய்ய எடுக்கும் முயற்சிக்கு தடை விதிக்க உத்தரவிடுமாறு கூறி முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

